இலங்கை வர்த்தகரின் 750 வைரங்கள் களவு

Gem

இலங்கை வர்த்தகரான Mohamed Azan Mohideen Abdul Cader என்பவரிடம், Hong Kong இல் வைத்து, 750 வைரங்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த வைரங்களின் மொத்த பெறுமதி சுமார் U$773,000 என்று கூறப்படுகிறது.
.
வைர வியாபாரியான இவர் அமெரிக்காவின் Las Vegas நகரில் இடம்பெற்ற வைர காட்சி ஒன்றுக்கு சென்று, பின் Hong Kong இல் அடுத்த கிழமை இடம்பெறவுள்ள காட்சி ஒன்றில் இவற்றை பார்வைக்கு வைக்கும் நோக்கிலேயே Hong Kong சென்றுள்ளார். வைரங்களை Hong Kong இல் வைத்துவிட்டு அவர் இலங்கை செல்லவிருந்தார்.
.
Hong Kong பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவரிடம் வைரங்கள் இருப்பதை அறிந்தே இந்த களவு இடம்பெற்று இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். பொலிசார் இரண்டு சந்தேகநபர்களை தேடி வருகின்றனர். இந்த களவு Hong Kong நகரின் சிம் சா சுய் (Tsim Sha Tsui) என்ற வர்த்தக பகுதியிலேயே இடம்பெற்று உள்ளது.
.

இவரின் இந்த வைரங்கள் காப்புறுதி செய்யப்படாதவை என்றபடியால் இவரே முழு இழப்பையும் பொறுப்பு ஏற்பார். களவாடப்பட்ட சில வைரங்கள் இவருடையது என்றாலும், பலது விற்பனைக்காக மற்றையவரால் இவரிடம் கொடுக்கப்பட்டவை.
.