இலங்கை வருகிறார் Pompeo

 

SriLankaIndia

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மைக் பம்பியோ (Mike Pompeo) இந்த மாதம் 24 ஆம் திகதி வரவுள்ளார். இந்திய தலைநகர் டெல்கிக்கான பயணத்தின் பின் இலங்கை வரும் இவர் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
.
இவரின் இலங்கை பயணம் சீனாவின் ஆளுமைக்குள் இருக்கும் இலங்கையை அமெரிக்கா பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கும்.
.
அதேவேளை இந்திய அமெரிக்க பொருட்கள் மீது இன்று சனிக்கிழமை புதிய இறக்குமதி வரியை நடைமுறை செய்துள்ளது. அமெரிக்காவின் ரம்ப் அரசு இந்திய பொருட்கள் மீது சில கிழமைகளுக்கு முன் நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாகவே இந்திய இன்று புதிய வரிகளை நடைமுறை செய்துள்ளது.
.
இந்தியா வரும் Pompeo இந்த விசயம் தொடர்பாக மோதியுடன் உரையாடுவார்.
.
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுடன் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் Pompeo பயணங்களை மேற்கொள்வார்.

.