இலங்கை சனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டி

இலங்கை சனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டி

வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனாதிபதி தேர்தலில் மொத்தம் 39 பேர் போட்டியிடுகின்றனர். இலங்கை வரலாற்றில் இத்தொகையே சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போட்டியாளரின் அதிக தொகையாகும்.

இதில் 22 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பிலும், 17 பேர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் தோல்வியுற்று 4ஆவதாக இருந்து, தேசிய பட்டியல் மூலம் UNP யின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான ரணில், வயது 75,  இம்முறை சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

சஜித் பிரேமதாச, வயது 57, SJB கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அனுரா குமார திசாநாயக்க, வயது 55,  NPP கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

சரத் பொன்சேகா, வயது 73, சுயேற்சையாக போட்டியிடுகிறார்.

நாமல் ராஜபக்ச, வயது 38, SPP கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

2023ம் ஆண்டு மார்ச் முதல் 2024ம் ஆண்டு மே வரையான கருத்துக்கணிப்புகளில் அனுரா குமார முன்னணியில் இருந்திருந்தாலும், ஜூன் மாதம் சஜித் 43% வாக்குகள் பெற்று முதலாம் இடத்தை அடைய அனுரா 30% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் சஜித் 41.99% வாக்குகள் பெற, கோத்தபாயா 52.25%  வாக்குகள் பெற்றிருந்தார்.