இலங்கை Exclusive Economic Zone அடங்கிய கடல் பகுதியில் சீனாவின் இரண்டு ஆய்வு கப்பல்கள் அதிக காலமாக செயற்படுவதால் இந்தியா சந்தேகம் கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு இலங்கையும் சீனாவும் சீனாவின் அட்மிரல் Zheng He என்ற 15 ஆம் நூற்றாண்டு சீன அரசியல் மற்றும் வர்த்தக பிரமுகரின் அமிழ்ந்த கப்பல்களையும் அவற்றில் இருந்த பொருட்களையும் கண்டெடுக்கும் பணிக்கு இணங்கி இருந்தன. களனி மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்கள் இதில் பங்கு கொண்டிருந்தாலும் பணிகள் முற்றாக சீனாவின் கையிலேயே இருக்கின்றன.
இதுவரை மேற்படி கப்பல்கள் 12 தடவைகள் இந்த கடல் பரப்புக்கு வந்தமை பகிரங்கமாக உள்ளன. ஆனால் இந்த கப்பல்கள் அவற்றுக்கும் அதிகமான காலம், மேற்படி அகழ்வு ஆய்வின் குடையின் கீழ், இப்பகுதி கடற்பரப்பை இராணுவ நோக்கில் ஆய்வு செய்வதாக இந்தியா கருதுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் சீனாவின் ஆளுமையை பரப்ப Zheng He உலகம் எங்கும் சென்று இருந்தார். காலி பகுதில் தரையிறங்கிய இவர் தமிழ், அரபு, சீனம் ஆகிய 3 மொழிகளிலான கல்வெட்டு (Galle Trilingual Inscription) ஒன்றையும் பதித்து இருந்தார். அந்த கல்வெட்டின் தமிழ் மொழியில் காலியில் உள்ள தென்னாவரம் விஷ்னுவை (Tenavaram temple, Naga-risa kovil) வழிபட்டும், அரபு மொழியில் அல்லாவை வழிபட்டும், சீன மொழியில் புத்தரை வழிபட்டும் உள்ளன. சிவனொளிபாத மலையும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த கல்வெட்டு தற்போது கொழும்பு தேசிய நூதனசாலையில் உள்ளதாக (Colombo National Museum) கூறப்படுகிறது. இந்த கல்வெட்டு 1409 ஆம் ஆண்டு Nanjing நகரில் செய்யப்பட்டது. Zheng He (1371 – 1435) ஒரு சீன இஸ்லாமியர்.