சீனா இலங்கைக்கு வழங்கிய பாவித்த யுத்த கப்பல் (frigate) இன்று இலங்கை வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் சீனாவின் கடல் படையால் பயன்படுத்தப்பட்ட Tongling என்ற யுத்த கப்பல் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
.
இந்த கப்பல் இலங்கைக்கு கடந்த மாதம் ஷாங்காய் நகரில் கையளிக்கப்பட்டது. இந்த கப்பலை செலுத்தும் செயல்பாடுகளை அறிய 18 இலங்கை கடற்படை அதிகாரிகளும், 92 கடற்படையினரும் சீனா சென்றிருந்தனர்.
.
சுமார் 2,300 தொன் எடை கொண்ட இந்த கப்பல் 112 மீட்டர் நீளம் கொண்டது.
.
அண்மையில் அமெரிக்கா இலங்கையுடன் நெருக்கமான உடன்படிக்கை ஒன்றில் இணைய விரும்பி இருந்தும், இலங்கை அதை நிராகரித்து உள்ளது. புதிய உடன்படிக்கை மூலம் அமெரிக்கா தனது படைகளுக்கு இலக்கையுள் அதிக அதிகாரங்களை பெற முயன்றது என்கிறது Jane’s Defence Weekly என்ற வெளியீடு.
.
அண்மையில் இலங்கை வரவிருந்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் திடீரென தனது இலங்கைக்கான பயணத்தை இரத்து செய்திருந்தார்.
.