2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை அஸ்ரேலியாவில் இலங்கையின் உதவி தூதுவராக கடமையாற்றிய Himalee Arunatilaka அவரின் வீட்டில் பணியாற்றிய Priyanka Danaratna என்ற பணிப்பெண்ணுக்கு A$ 543,000 செலுத்த அஸ்ரேலிய நீதிமன்றம் வியாழன் கட்டளை இட்டுள்ளது.
2015 முதல் 2018 வரையான 3 ஆண்டு காலம், கிழமையில் 7 நாட்களும் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு மொத்தம் A$ 11,212 மட்டுமே Himalee வழங்கியுள்ளார். 2015ம் ஆண்டில் அஸ்ரேலியாவில் கிழமை ஒன்றுக்கான மிக குறைந்த ஊதியம் A$ 656.90 ஆக இருந்துள்ளது.
பணிப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறுதொகை பணமும் இலங்கையில் உள்ள வங்கி ஒன்றிலேயே வைப்பிடப்பட்டுள்ளது.
மொத்த தண்டத்தில் A$ 374,000 வழங்கப்படாத ஊதியம், A$ 169,000 அதற்கான வட்டி.
பணிப்பெண் தப்புவதற்கு அஸ்ரேலியாவின் Salvation Army என்ற தொண்டர் அமைப்பு உதவியுள்ளது.
Himalee தற்போது ஐ.நாவுக்கான இலங்கையின் Permanent Representative ஆக பணியாற்றுகிறார்.