இலங்கையர் உட்பட 93 நாட்டவர்க்கு தாய்லாந்து விசா இன்றி அனுமதி வழங்கவுள்ளது. ஏற்கனவே 57 நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த வசதி தற்போது 93 நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிப்பதே தாய்லாந்தின் நோக்கம்.
இந்த விசாவை கொண்டிருப்போர் தாய்லாந்தில் 60 தினங்கள் வரை தங்கியிருக்கலாம். இந்த திட்டம் தாய்லாந்து Royal Gazette இல் வெளிவந்த பின் நடைமுறை செய்யப்படும்.
இதுவரை 19 நாடுகளுக்கு மட்டும் visa-on-arrival வழங்கிய தாய்லாந்து தற்போது 31 நாடுகளுக்கு visa-on-arrival வழங்கவுள்ளது. இலங்கைக்கு visa-on-arrival வழங்கப்படாது.
ஜூலை 7ம் திகதிக்கு முன்னரான ஓர் ஆண்டில் தாய்லாந்துக்கு 18.2 மில்லியன் உல்லாச பயணிகள் சென்றுள்ளனர் என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது. இவர்கள் $24 பில்லியன் வருமானத்தை தாய்லாந்துக்கு வழங்கி உள்ளனர். தாய்லாந்துக்கான உல்லாச பயணிகள் எண்ணிகையில் சீனர் முதல் இடத்தில் உள்ளனர்.