இலங்கை இறக்குமதியை அதிகரிக்க சீ இணக்கம்

இலங்கை இறக்குமதியை அதிகரிக்க சீ இணக்கம்

இலங்கையில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியை அதிகரிக்க சீனாவின் சனாதிபதி சீ இன்று வெள்ளி இணங்கி உள்ளார். இலங்கை சனாதிபதி ரணில் உடனான சந்திப்பின் பின்னரே சீ இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

அத்துடன் சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதையும் ஊக்குவிக்க உள்ளதாக சீ கூறியுள்ளார்.

ஆனால் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிய பின் குறைந்தது முட்டையையாவது  உற்பத்தி செய்ய முடியாது அதையும் இறக்குமதி செய்யும் இலங்கை எதை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும்?

அது மட்டுமன்றி IMF அடுத்த தொகுதி கடனை இலங்கைக்கு வழங்க முன் எதிர்பார்ப்பது சீனா தான் இலங்கைக்கு வழங்கிய கடனினதும், அதன் வட்டியினதும் பெரும் பகுதியை இல்லாது கழித்து விடவே.

அதிகரித்த இறக்குமதியை கடனுக்கு மாற்றீடாக IMF ஏற்குமா என்பதை பொறுத்திருந்தே அறியலாம்.