தமிழ்நாட்டில் தற்போது தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 317 கோடி இந்திய ரூபாய்களை ஓதுக்கவுள்ளார். Rule 110 சட்டத்துக்கு அமைந்த இந்த அறிவிப்பை அவர் இன்று வெள்ளி தெரிவித்துள்ளார்.
அதில் 231 கோடி பணம் மொத்தம் 7,469 வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும். முதல் கட்டத்தில் 3,520 வீடுகள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு ஏரி வாயு, அடுப்பு ஆகியனவும் இலவசமாக வழங்கப்படும்.
அதேவேளை கல்வி அமைச்சு 50 மாணவார்களுக்கு இலவச பொறியியல் கல்வியும் வழங்கும்.
1983ம் ஆண்டு முதல் மொத்தம் 304,269 அகதிகள் இந்தியா சென்றதாக கூறப்படுகிறது. தற்போது 58,822 அகதிகள் 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் உள்ளதாகவும், மேலும் 34,087 பேர் வெளியே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் கையில் குடியுரிமை கட்டுப்பாடு உள்ளதால் இவர்கள் யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு பின்னும் அகதிகளே. இந்த அகதிகள் இலங்கை செல்ல விரும்பவில்லையா அல்லது மத்திய அரசு அதை தடுக்கிறதா என்பது துலக்கமாக இல்லை. இவர்கள் இலங்கை வந்தால் வீழ்ச்சி அடைந்த இலங்கை தமிழர் எண்ணிக்கை சற்று உயரும். அது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்கும்.