இலங்கையை நோக்கி அடுத்த தாழமுக்கம் வருகிறது. தற்போது வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம் ஓரிரு தினங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தரை தட்டலாம்.
இது தமிழ்நாட்டின் பகுதிகளையும் தாக்கும். இந்த மழை 3 அல்லது 4 தினங்களுக்கு நீடிக்கலாம்.
இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் காற்று வீச்சு சுமார் 55 km/h ஆக இருக்கும்.
மன்னார் வளைகுடா பகுதியிலும் இந்த சூறாவளி உக்கிரமாக இருக்கும். இங்கு கடலில் காற்று வீச்சு சுமார் 45 km/h ஆக இருக்கும்.
சென்னையில் உள்ள Regional Meteorological Centre அறிவித்தலின்படி இந்த புயல் ராமநாதபுரம் முதல் கடலூர் வரையான கரையோர பகுதிகளையும், புதுக்கோட்டை , தஞ்சாவூர் போன்ற உட்பகுதிகளையும் டிசம்பர் 19ம், 20ம் திகதிகளில் கடுமையாக தாக்கும்.