இலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள Cinnamon BEY என்ற உல்லாச பயணிகள் விடுதி ஒன்று orange juice க்கு மொத்தம் Rs. 6,075.00 அறவிட்டு உள்ளது.
Orange juice Rs. 4,565.00 என்றும், சேவை கட்டணம் 456.50 என்றும், அரச வரி 1,055.80 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதன் விலை சுமார் $19.00 ஆகையால் இதுவே உலகின் அதி கூடிய விலை கொண்ட orange juice ஆக இருக்கும்.
இந்த கொள்வனவு விபரம் இணையம் எங்கும் பேசப்படுகிறது. ஆனால் விடுதி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை.