பண நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு $300 மில்லியன் முதல் $600 மில்லியன் வரையிலான உதவியை வழங்க இன்று வெள்ளி உலக வங்கி முன்வந்துள்ளது. இந்த உதவி அடுத்த 4 மாத காலத்தில் மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மட்டும் பயன்படுத்தப்படும்.
IMF உதவி வழங்குவதற்கு சில காலம் தேவைப்படும் என்று கூறப்பட்ட நிலையிலேயே உலக வங்கியின் உதவி கிடைக்கவுள்ளது.
அதேவேளை இந்தியா மேலும் $500 மில்லியன் உதவியை எரிபொருள் கொள்வனவுக்கு வழங்கும். மேலும் $1 பில்லியன் இந்தியாவிடம் இருந்து பெற பேச்சுக்கள் நடைபெறுகின்றன.
சீனாவும் மேலதிக உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. அதன்படி சீனா 5,000 தொன் அரிசி, மருந்துகள் போன்றவற்றை வழங்குகிறது. இலங்கையின் $2.5 பில்லியன் கடன் விண்ணப்பத்தையும் சீனா பரிசீலனை செய்கிறது.
ஜப்பான், Asian Development Bank ஆகியவற்றிடமும் இலங்கை உதவி கேட்டுள்ளது. இந்த உதவிகள் இலங்கையின் கடனை அடைக்க போதாது.
அமெரிக்க டாலர் ஒன்றுக்கு தற்போது 340 இலங்கை ரூபாய்கள் வங்கிகளில் வரை கிடக்கின்றன.