இலங்கைக்கு புதிதாக Marines படை (Marines Corps) அமைக்கப்பட்டுள்ளது. அந்த புதிய படைக்கு அமெரிக்காவின் Marines பயிற்சி வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த புதிய படை 7 அதிகாரிகளையும், 150 படையினரையும் (sailors) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
.
.
பொதுவாக நாடுகள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்று படை பிரிவுகளை கொண்டிருந்தாலும், அமெரிக்கா போன்ற சில நாடுகள் தரையிலும், கடலிலும் இயங்கக்கூடிய ஒரு அணியையும் கொண்டிருப்பது உண்டு. இவ்வகை படையினர் விசேட தாக்குதல்களுக்கு பயப்படுத்தப்படுவர். உதாரணமாக, இப்படை கடல் மூலம் எதிரியின் நாட்டுள் புகுந்து, பின் தொடர்ந்து தரை மூலம் முன்னேறுவர்.
.
.
இலங்கையின் Marines படையினர், அமெரிக்காவின் Marines அமைப்பை கொண்டதாக இருக்கும். அமெரிக்காவின் USS Somerset யுத்த கப்பலில் நிலைகொண்டுள்ள 11வது Marines படையணி இலங்கை படைக்கு இந்த பயிற்சியை வழங்கி உள்ளது. நவம்பர் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை இந்த பயிற்சி இடம்பெற்றதாக கூறப்பட்டு உள்ளது. தாம் தொடர்ந்தும் இலங்கை Marines படையுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அமெரிக்கா Marines படை கேணல் Clay C. Tipton கூறியுள்ளார்.
.
.
திருகோணமலை கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பலே இந்த பயிற்சியில் ஈடுபட்டது. அமெரிக்கா தரப்பில் 300 படையினர் இந்த பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படு உள்ளது.
.