இறைச்சியுடன் பிடிபட்ட பயணிக்கு அஸ்ரேலியா $2664 தண்டம்

இறைச்சியுடன் பிடிபட்ட பயணிக்கு அஸ்ரேலியா $2664 தண்டம்

அஸ்ரேலியாவுக்கு இறைச்சி வகைகளை தனது பொதிகளில் எடுத்து சென்று, ஆனால் அவ்வாறு எடுத்து செல்வதை பயணிகள் ஆவணத்தில் மறுத்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு அஸ்ரேலியா $2664 தண்டம் விதித்துள்ளது.

அத்துடன் அவரின் விசாவும் இரத்து செய்யப்பட்டு, அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளார்.

இந்த பயணி தனது பொதிகளில் 3.1 kg வாத்து (duck) இறைச்சி, 1.4 kg சமைத்த மாட்டு இறைச்சி (beef rendang), 500 g உறைந்த மாட்டு இறைச்சி, 900 g கோழி இறைச்சி ஆகியன இருந்துள்ளன.

அஸ்ரேலியாவின் Perth விமான நிலையத்தில் இறங்கிய இந்த பயணி Incoming Passenger Card என்ற ஆவணத்தில் தன்னிடம் இறைச்சி எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேற்படி இறைச்சிகள் foot and mouth மற்றும் swine fever போன்ற நோய்களை காவலாம் என்று கூறுகிறது அஸ்ரேலிய அரசு.