ரஷ்யா இறுதியாக நடைமுறையில் இருந்த அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக இன்று செவ்வாய் ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். New START இந்த ஒப்பந்தமே அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடைமுறையில் இருந்த இறுதி அணுவாயுத குறைப்பு இணக்கமாகும்.
மேற்படி இணக்கம் இருதரப்பும் எவ்வளவு மற்றும் எவ்வகை அணு ஆயுதங்களை கொண்டிருக்கலாம் என்று விதிமுறை செய்கிறது. இன்றில் இருந்து அந்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்காது. இந்த இணக்கம் 2021ம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகளுக்கு, 2026ம் ஆண்டு வரை, நீடிக்கப்பட்டு இருந்தது.
இந்த இணக்கத்தில் இரண்டு நாடும் மற்றைய நாட்டுள் சென்று அணு ஆயுதங்களை கண்காணிக்க வசதி இருந்தது. அந்த வசதி இன்று முதல் நிறுத்தப்படுகிறது.
அமெரிக்கா இந்த அறிவிப்பை “deeply unfortunate and irresponsible” என்றும் விபரித்துள்ளது.