இரு இந்திய CBI தலைமைகள் பதவி நீக்கம்

CBI

இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான CBI யின் (Central Bureau of Investigation) முதலாவது அதிகாரியான director Alok Kumar Verma என்பவரும், இரண்டாவது முக்கிய அதிகாரியான Rakesh Asthana என்பவரும் இன்று புதன் கிழமை (அக்ரோபர் 23) மோதி அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். Nageshwar Rao என்பவர் தற்போது director ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
.
பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கும் இடையே வலுத்து வந்த முரண்பாடுகளே அவர்களின் பதவி நீக்கலுக்கு காரணம் என்றுள்ளது மோதி அரசு. அவர்கள் இருவரும் மற்றவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர் என்றும் அரசு கூறியுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட உள்நோக்கங்கள் வேறு உள்ளன என்று கூறுகின்றன எதிரிக்கட்சிகள். அத்துடன் மோதி அரசு இவ்வாறு தான்தோன்றி தனமாக நடந்து கொண்டதையும் எதிர்கின்றன எதிர்க்கட்சிகள்.
.
கடந்த திங்கள் கிழமை டில்லியில் உள்ள CBIயின் தலைமையகம் CBI தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அன்று Devender Kumar என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார்.
.
Alok Kumar Verma 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் CBIயின் தலைமை பதிவுக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். Rakesh Asthana அதே வருடம் அக்டோபரில் விசேட director ஆக நியமிக்கப்பட்டு இருந்தார்.
.
Rakesh Asthana 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை விசாரணை செய்திருந்தவர். விசாரணை முடிவில் அந்நாள் குஜராத் முதலமைச்சர் மோதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டும் இருந்தவர்.

.