இரும்பு, அலுமினிய வரி, வர்த்தக போருக்கு அறிகுறி

Trump

அமெரிக்காவின் ரம்ப் அரசு அமெரிக்காவுள் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு (steel) 25% இறக்குமதி வரியையும், அலுமினியத்துக்கு (aluminum) 10% வரியையும் நடைமுறை செய்ய திடமாக உள்ளது. ஆனால் இந்த புதிய வரிகள் அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒரு வர்த்தக போரை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
மேற்படி வரி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மலிவு விலை உலோக அளவை கட்டுப்படுத்த வரையப்பட்டது என்று கூறப்பட்டாலும், இந்த புதிய வரி கனடாவையும் ஐரோப்பிய நாடுகளையுமே அதிகம் பாதிக்கும். கடந்த வருடம் கனடா $7.2 பில்லியன் பெறுமதியான steel, $4.3 பில்லியன் பெறுமதியான அலுமினியம் ஆகியவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
.
சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் steel அளவைப்போல் சுமார் 5 மடங்கு steel கனடாவில் இருந்து அமெரிக்கா செல்கிறது. அத்துடன் ஜப்பான், தென்கொரியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளும் பெரிதும் பாதிப்பு அடையும்.
.

இன்று ஞாயிரு ரம்ப் பிரித்தானிய பிரதமர் மேயுடன் (May) இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது மே இப்புதிய வரி தொடர்பாக ஆழ்ந்த கவலையை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
.