இராணுவ தளபதி Shavendra Silva மீது அமெரிக்கா தடை

SriLanka_US

இலங்கையின் இராணுவ தளபதியான Lt. General Shavendra Silva மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் அமெரிக்கா இன்று வெள்ளி தடை விதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்ற செயல்களுக்கு இவரும் காரணம் என்று ஐ.நா. போன்ற அமைப்புக்கள் கூறியமையே இந்த தடைக்கு காரணம் என்று கூறுகிறது அமெரிக்கா.
.
சில்வா மீதான தடையை அமெரிக்காவின் வெளியுவு செயலாளர் Mike Pompeo தெரிவித்து உள்ளார்.
.
இலங்கை வெளியுறவு அமைச்சு மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், தடையை மீண்டும் ஆராயும்படியும் கேட்டுள்ளது.
.
Lt. General சில்வா கடந்த ஆகஸ்ட் மாதமே இராணுவத்தின் தலைமை பதவியை பெற்று இருந்தார். அதற்கு பின்னர் ஐ. நா. இலங்கை படையினர் உலக அளவிலான அமைதிகாக்கும் ஐ. நா. படைகளில் இடம்பெறுவதை நிறுத்தி இருந்தது.
.
No fire zone என்று இலங்கை அரசாங்கத்தாலேயே ஒதுக்கப்பட்ட இடங்களில் இடம்பெற்ற குற்ற செயல்களே முக்கிய குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
.
1964 ஆம் ஆண்டு பிறந்த சில்வா, 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைத்திருந்தார்.
.