இராணுவ சட்டத்தை கைவிட்டார் தென் கொரிய சனாதிபதி

இராணுவ சட்டத்தை கைவிட்டார் தென் கொரிய சனாதிபதி

பலத்த எதிர்ப்புகள் காரணமாக தனது இராணுவ சட்டத்தை தென் கொரிய சனாதிபதி Yoon நடைமுறை செய்து 24 மணித்தியாலத்துள் கைவிட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் தொடர்ந்தும் சனாதிபதியாக ஆட்சி செய்வது கடினமாகிறது.

இராணுவ சட்டம் நடைமுறையை செய்யப்பட்டதை அறிந்த தொழிலாளர், அரசியல் உறுப்பினர்கள், மக்கள் வீதிக்கு வந்ததால் சனாதிபதி தனது திட்டத்தை கைவிட நேர்ந்துள்ளது. மொத்தம் 300 பாராளுமன்ற உறுப்பினர்களில், அவரின் கட்சியை சார்ந்தோர் உட்பட, குறைந்தது 190 பேர் சனாதிபதிக்கு எதிராக மாறியுள்ளனர்.

இன்று புதன்கிழமை எதிர்க்கட்சியினர் சனாதிபதியை பதவியில் இருந்து impeachment மூலம் விலக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கை ஓரளவு மதிக்கும் நாட்டில் தகுந்த காரணம்இன்றி இராணுவ சட்டம் நடைமுறை செய்தது நகைப்புக்குரிய விசயம் ஆகி உள்ளது. 

Yoon னுக்கு கீழ் கடமையாற்றிய chief of staff உட்பட குறைந்தது 10 உயர் அதிகாரிகள் தம் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளனர்.