தாய்லாந்து இராணுவ ஆட்சி, அமெரிக்கா இராணுவ பயிட்சி

CobraGold

தாய்லாந்து இராணுவம் கடந்த வருடம் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் இருந்த அரசை கவிழ்த்துவிட்டு இராணுவ இராணுவ ஆட்சி செய்து வருகிறது. பொதுவாக தம்மை ஜனநாய காப்பாளர்களாக பிரச்சாரம் செய்யும் மேற்கு உடனே இராஜதந்திர தடைகள், பொருளாதார தடைகள் என தடைகள் விதிப்பதுண்டு. அனால் வரும் திங்கள்கிழமை (2015/02/09) முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற இருக்கும் Cobra Gold என அழைக்கப்படும் கூட்டு இராணுவ பயிட்சியில் கலந்துகொள்கிறது அமெரிக்கா.
.
வருடாந்த Cobra Gold இராணவ பயிட்சி 1982 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்து கடல்பரப்புக்கு அண்மையில் நடந்து வருகிறது. முதலில் தாய்லாந்தும் அமெரிக்காவும் மட்டுமே பங்கு கொண்டிருந்தன. பின்னர் தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட பல நாடுகள் இணைந்தன. இவ்வருடம் 4000 தாய்லாந்து படையினர், 4000 அமெரிக்க படையினர் உட்பட சுமார் 14,000 படையினர் பங்கு கொள்வார்.
.
இந்த வருடம் முதல் முறையாக சீனாவும் Cobra Gold பயிட்சிகளில் பங்கு கொள்ளவுள்ளது. ஆனால் சீனாவின் பங்களிப்பு முழுமையாக வெளியிடப்படவில்லை. அனேகமாக சீனா combat பயிட்சிகளில் பங்கு கொள்ளாது humanitarian பயிட்சிகளில்மட்டுமே இவ்வருடம் பங்கு கொள்ளலாம்.
.
தாய்லாந்து இராணுவம் சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடும் என்ற பீதி காரணமாகவே அமெரிக்கா தாய்லாந்து இராணுவ ஆட்சியை மறந்துவிட்டு பயிட்சிகளில்ஈடுபட முன்வந்துள்ளது.