இரண்டு செய்மதிகள் இன்று மாலை மோதலாம்

Satellites

கைவிடப்பட்ட இரண்டு செய்மதிகள் இன்று மோதிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும் மோதுவதற்கான நிகழ்தவது 5% மட்டுமே (1/20).
.
1967 ஆம் ஆண்டு ஏவப்பட்ட அமெரிக்காவின் GGSE-4 என்ற செய்மதியும், 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட IRAS என்ற செய்மதியுமே இன்று மிக அருகால் செல்லவுள்ளன.
.
அமெரிக்காவின் Pittsburgh நகர நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு மேற்படி இரண்டு செய்மதிகளும் சுமார் 900 km உயரத்தில், 12 மீட்டர் இடைவெளியால் செல்லும். அப்போது இவற்றின் வேகம் சுமார் 53,000 km/h (33,000 mph) ஆக இருக்கும்.
.
2009 ஆம் ஆண்டும் அமெரிக்காவினதும், ரஷ்யாவினதும் செய்மதிகள் இரண்டு சைபீரியாவுக்கு மேலே மோதி இருந்தன.
.
மோதும் செய்மதிகள் பல்லாயிரம் துண்டங்களை பரப்பும். இந்த துண்டங்கள் சேவையில் உள்ள மற்றைய செய்மதிகளை தாக்கி அழிக்க சந்தர்ப்பம் உண்டு.
.
தற்போது சுமார் 2,000 செய்மதிகள் சேவையில் உள்ளன.
.