இந்திய இராணுவமும், பாகிஸ்தான் இராணுவமும் வெள்ளிக்கிழமையும், இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் மறு தரப்பு மீது சுட்டு உள்ளன. சிறு ஆயுதங்களால் செய்யப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு விளைவான அழிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஏப்ரல் 22ம் திகதி காஷ்மீர் பகுதியில் 26 இந்திய உல்லாச பயணிகள் துப்பாக்கி குழு ஒன்றால் சுட்டு கொன்றமைக்கு பின் இரண்டு நாடுகளும் மீண்டும் முறுகல் நிலையில் உள்ளன.
தாக்குதலை செய்தவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர் என்றும், ஒருவர் இந்தியர் என்றும் இந்தியா கூறுகிறது.
1960ம் ஆண்டு இரண்டு நாடுகளும் செய்து கொண்ட Indus Water Treaty யை இந்தியா இடைநிறுத்த, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான் பரப்பை தடை செய்துள்ளது.
இந்தியா சிறிது காலத்துக்கு ஆற்று நீரை தடுக்கலாம், ஆனால் நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்க முடியாது. அத்தொகை நீரை தடுத்து வைக்க இடமோ அல்லது வேறு திசைக்கு திருப்ப வசதியோ இந்தியாவிடம் இல்லை. அத்துடன் உயரத்து நீரை கீழே பாய விட்டால் மட்டுமே இந்தியா நீர் மின்னை பெறலாம்.
இந்தியா நீரை தடுப்பது பாகிஸ்தானை கோடை காலங்களில் மட்டுமே பெரிதும் பாதிக்கும்.
பாகிஸ்தான் வான் பரப்பு தடைப்பட்டமையால் வட அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வரும் இந்திய விமானங்கள் நீண்ட தூரம் சுற்றி பயணிக்க உள்ளன.
பாகிஸ்தான் ஊடு செல்லும் ஆறு முதலில் இந்தியா ஊடு செல்வது போல் இந்தியா ஊடு செல்லும் பிரம்மபுத்திரா போன்ற ஆறு முதலில் சீனா ஊடே பாய்கிறது.