இரண்டாம் தடவையாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் மீது impeachment என்ற பதவி விலக்கல் முயற்சி அடுத்த கிழமை இடம்பெறவுள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்யப்படின் ரம்பே இரண்டு தடவைகள் impeachment செய்யப்பட்ட அமெரிக்க சனாதிபதி ஆவார்.
Democratic கட்சியின் பெரும்பான்மையை கொண்டிருந்த அமெரிக்க House அவை முன்னரும் ஒருதடவை ரம்பை impeachment செய்திருந்தது. ஆனால் Republican கட்சியின் பெரும்பான்மையை கொண்டிருந்த Senate அதை நடைமுறை செய்யாது தடுத்தது. Senate (upper house, 100 உறுப்பினர்), House (lower house, 435 உறுப்பினர்) ஆகியன அமெரிக்க காங்கிரசின் இரண்டு அவைகள்.
இம்முறை சில Republican கட்சி Senate உறுப்பினர்களும் ரம்பை impeachment செய்ய விரும்பினாலும் சட்டப்படி அதற்கு Senate அவையின் 2/3 வாக்குகள் தேவை. தற்போது 50 Democratic கட்சி Senate உறுப்பினர்களே உள்ளனர். அதனால் impeachment செய்ய குறைந்தது 17 Republican கட்சி Senate உறுப்பினரின் ஆதரவும் தேவை.
ரம்பின் Republican கட்சி உறுப்பினர்கள் அதிக அளவில் ரம்பை வெறுத்தாலும் அதை பகிரங்கமாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ரம்புக்கு வாக்களித்த 70 மில்லியனுக்கும் மேலான வாக்காளரை அவர்கள் பகைக்க விரும்பாமையே காரணம்.
மேலும் 10 தினங்களில் பதவியை விலகவுள்ள ரம்பை ஏன் impeachment செய்யவேண்டும் என்று Republican உறுப்பினர் கேட்கின்றனர். Impeachment மூலம் ரம்ப் மீண்டும் சனாதிபதி தேர்தலில் போட்டியிட முனைவதை தடுக்க வேண்டும் என்கின்றனர் Democratic கட்சியினர்.
ரம்ப் பதவியில் இருந்து விலகிய பின்னரும் பல வழக்குகள் அவர்மீது தொடர உள்ளன. தற்போது அவருக்கு உள்ள சில சட்டமுறையிலான பாதுகாப்புகள் அவர் பதவியில் இருந்து விலகியபின் அற்றுப்போகும்.
அத்துடன் ரம்பின் கல்விக்கான செயலாளர் (Betsy DeVos), போக்குவரத்து செயலாளர் (Elaine Chao) ஆகியயோர் Capitol வன்முறைக்கு ரம்பை காரணம் கூறி தமது பதவிகளில் இருந்து விலகி உள்ளனர். இவர்கள் அமைச்சர்களுக்கு நிகரானவர். மேலும் சுமார் 20 இடைநிலை அதிகாரிகளும் ரம்பை கண்டித்து, தமது பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.
ரம்பின் Twitter கணக்கு மூடப்பட்டு உள்ளதால் அவர் தமது தொண்டர்களுடன் தொடர்புகொள்வதும் தடைப்பட்டு உள்ளது.
Capitol வன்முறைகளில் பங்குகொண்டோர் பலர் ஏற்கனவே FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அவர்கள் மீது கொலை, கொள்ளை, உடமைகளை நாசம் செய்தல், குழப்பம் விளைவித்தல் போன்ற பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவர்களை கூட்டம் கூடி ஏவிய ரம்பும் தற்போது அவர்களை கைவிட்டு உள்ளார்.