இரணையில் ஒன்றை கைவிட்ட பெற்றார்

Gammy

ஆஸ்திரேலிய நாட்டின் தம்பதியினர், மனைவியின் உடல்நல குறைபாடு காரணமாக தமக்கு குழந்தை பிறக்காது என்பதால் Pattramon Chanbua என்ற தாய்லாந்து பெண் ஒருவரை 10,000 euro கொடுத்து surrogate தாயாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். பணம் கொடுத்து இவ்வகையில் surrogate தாய் எடுப்பது ஆஸ்திரேலியாவில் குற்றம். அதனாலேயே இவர்கள் தாய்லாந்து போன்ற இடங்களில் அவ்வகை வாடகை தாயை பிறப்பு வரை வாடகைக்கு அமர்த்துவர்.
.
இந்த தம்பதியினரின் கருக்கட்டல் இரணை பிள்ளைகளை தாய்லாந்து வாடகை தாய்க்கு கொடுத்தது. ஆனால் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று Down’s Syndrome என்ற நோயுடனும் பாதிக்கப்பட்ட இதயத்துடனும் பிறந்து. Gammy என்ற இந்த ஆண் குழந்தையை தாய்லாந்து வாடகை தாயிடம் கொடுத்துவிட்டு நலமுடன் பிறந்த பெண் குழந்தையுடன் ஆஸ்திரேலிய தம்பதியினர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர்.
.
இதை அறிந்த ஆஸ்திரேலியாவின் Hands Across the Water என்ற குழு Gammy இக்கு பணம் சேகரித்தது. இதுவரை சுமார் $200,000 கிடைத்துள்ளதாகவும், அது Gammyயின் மருத்துவ செலவுகளுக்கு போதும் என்றும் கூறப்படுகிறது.
.
ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் Scott Morrison இது விடயமாக கருத்து தெரிவிக்கையில் “I think perhaps this may fall more into the territory of what people’s moral responsibilities are here” என்றுள்ளார்.
.
வருடம் ஒன்றுக்கு சுமார் 500 ஆஸ்திரேலிய தம்பதியினர் வெளிநாடுகளில் வாடகை தாயை எடுப்பதாக கூறப்படுகிறது.