1953 ஆம் ஆண்டு இருந்து சுமார் 6,500 தடவைகள் மனிதர் இமயமலையின் உச்சியை அடைந்து உள்ளனர். சிலர் பல தடவைகள் சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 300 பேர் அங்கு மரணித்தும் உள்ளனர். போதிய வளி (oxyzen) இன்மை, கடும் குளிர், மலையேறும் களைப்பு, போதிய நீர் மற்றும் உணவு இன்மை போன்ற பல காரணிகள் மரணங்களுக்கு காரணம்.
மரணித்தோரின் உடல்களில் சுமார் 150 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மிகுதி 150 உடல்கள் தற்போதும் அங்கேயே கைவிடப்பட்டு உள்ளன. சில பெரும் பள்ளத்தாக்குகளில் வீழ்ந்து உள்ளன. உடல்களை மீட்காமைக்கு செலவே மிக முக்கிய காரணம். உடல் உள்ள இடத்தின் உயரம், உடலை சுற்றி உள்ள இடர்பாடுகள் எல்லாமே செலவை தீர்மானிக்கும். சராசரியாக உடல் ஒன்றை அங்கிருந்து மீட்க சுமார் $100,000 செலவாகும் என்று கூறப்படுகிறது.
உலக வெப்பநிலை அதிகரிக்க sonw வுள் ஆழ்ந்திருந்த உடல்கள் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்து உள்ளன. 1924 ஆம் ஆண்டு அங்கு மரணித்து காணாமல் போயிருந்த George Mallroy என்பவரின் உடல் 1999 ஆம் ஆண்டு 8,155 மீட்டர் உயரத்தில் (26,755 அடி) காணப்பட்டது. உடல்கள் பொதுவாக கல்போல் உறைந்து இருக்கும்.
Goutam Ghosh என்ற கல்கத்தாகாரர் இமயத்தில் 2017 ஆம் ஆண்டு மரணித்த இருந்தார். அவரின் உடலையும் மேலும் இருவரின் உடல்களையும் மீட்க இந்தியா சுமார் $200,000 செலவழித்து இருந்தது. மீட்பு வேலைகளை மலை வாசிகளான Sherpa இனத்தவர் செய்வர்.
1953 ஆம் ஆண்டுக்கு முன்னரும் பலர் இமயத்தின் உச்சியை அடைய முனைந்து இருந்தாலும், பதியப்பட்ட தரவுகளின்படி 1953 ஆம் ஆண்டே Tenzing Norgay என்ற நேபாளியும், Edmund Hillary என்ற நியூசிலாந்துகாரரும் உச்சியை அடைந்து இருந்தனர். இவர்கள் மலையின் தென் வழியா ஏறி உச்சியை அடைந்தனர். 1960 ஆம் ஆண்டு 3 சீனர் வடபகுதி வழியாக ஏறி இருந்தனர். வடபகுதி பாதை மிகவும் இடரானது.
அங்கு தற்போது கண்ணனுக்கு தெரியும் உடல் ஒன்று Green Boots என்று பெயரிடப்பட்டு உள்ளது. அடையாளம் அறியாத இவர் அணிந்து இருக்கும் பச்சை நிற காலணியை அந்த பெயர் குறிக்கிறது.