இன்று முதல் சனி, ஞாயிறு காங்கேசன்துறை Intercity 

இன்று முதல் சனி, ஞாயிறு காங்கேசன்துறை Intercity 

இன்று சனிக்கிழமை (நவம்பர் 2) முதல் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான குளிரூட்டப்பட்ட Intercity ரயில் சேவை ஆரம்பிக்கிறது என்று இலங்கை ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

சனி, ஞாயிறு தினங்களில் காலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்கும் இந்த Intercity ரயில் காலை 11:38 மணிக்கு காங்கேசன்துறையை அடையும்.

பின் காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 12:30 பயணத்தை ஆரம்பித்து மாலை 7:19 மணிக்கு கொழும்பை அடையும்.

இந்த ரயிலில் யாழ்ப்பாண, காங்கேசன்துறை நிலையங்களுக்கான ஒருவழி பயணத்துக்கு கட்டணம் 3,200 ரூபாய்கள். கொழும்பில் இருந்து வவுனியா, கிளிநொச்சிக்கு 3,000 ரூபாய்கள். இதில் முதலாம் வகுப்பு ஆசனங்கள் மட்டுமே உள்ளன.

அதேவேளை யாழ்தேவி தினசரி கொழும்பில் இருந்து காலை 5:45 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து காங்கேசன்துறையை பிற்பகல் 1:23 மணிக்கு அடைகிறது. இதில் 1ம், 2ம், 3ம் வகுப்பு ஆசனங்கள் உண்டு.