இன்று ஜூன் 11 ஆம் திகதி இரவு சுமார் 9:00 மணிமுதல் சந்திரனையும் (Moon) , வியாழனையும் (Jupiter) ஒரே பார்வையில் பார்க்கக்கூடியதாக இருந்தது. இனிவரும் நாட்களிலும் இதை பார்க்ககூடியதாக இருப்பினும், வியாழன் படிப்படியாக அடிவானத்தின் வழியே செல்ல ஆரம்பிக்கும். அதனால் இலகுவில் பார்ப்பது கடினமாகப்போகும். தொலைநோக்கி உதவி இன்றி இதை பார்க்கக்கூடியதாக இருக்கும்.
.
எமது சூரிய மண்டலத்தில் வியாழனே மிகப்பெரிய கிரகமாகும். பூமியைவிடவும் வியாழன் சூரியனில் இருந்து தொலைவில் இருப்பதால் வியாழன் சூரியனை ஒருதடவை சுற்ற சுமார் 12 வருடங்கள் எடுக்கும்.
.
.
வரும் August 27 ஆம் திகதி வியாழனும், வெள்ளியும் (Venus) மிகமிக அண்மையில் தெரியும். அப்போது இவை இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் சந்திரனின் விட்டத்தைவிட குறைவாக இருக்கும்.
.