இன்று திங்கள் அதிகாலை இந்தியா தனது Chandrayaan-2 என்ற சந்திரனுக்கான ஆளில்லா பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தின்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும். மனித கலம் ஒன்று சந்திரனின் தென் துருவம் போவது இதுவே முதல் தடவை. இங்கே நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
Geosynchronous Satellite Launch Vehicle Mark III என்ற இந்த ஏவுகலம் (Launch Vehicle) தன்னுள் 2,400 kg எடை கொண்ட orbiter, 1,500 kg எடை கொண்ட Vikram என்ற lander, 27 kg எடை கொண்ட Pragyan என்ற rover ஆகிய மூன்றையும் எடுத்து செல்லும். Launch vehicle உதவியுடன் பூமியை சுற்றியுள்ள Earth Parking Point என்ற சுற்று பாதையை அடைந்த இவை அங்கிருந்து சந்திரனை சுற்றியுள்ள சுற்றுபாதையை நோக்கி ஏவப்படும்.
.
சந்திரனை சுற்றியுள்ள சுற்று பாதையை அடைந்த Orbiter தொடர்ந்தும் இப்பாதையில் சுற்றிவர, lander சந்திரனின் தென் துருவம் நோக்கி இறங்கும். இது சந்திரனின் மத்திய கோட்டில் இருந்து 70 பாகை தெற்கே தரையிறங்கும்.
.
தரையிறங்கிய lander இல் இருந்து வெளியேறும் Pragyan என்ற rover சுமார் அரை km தூரம்வரை சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். ஆய்வின் தரவுகள் இந்திய ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்படும்.
.
இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன், ஜூலை 20 ஆம் திகதி, அமெரிக்கா முதல் தடவையாக சந்திரனில் காலடி பதித்திருந்தது.
.