இன்று வெள்ளி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்கின என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் Isfahan நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான FARS அறிவித்துள்ளது.
Isfahan ஈரானின் அணு ஆய்வு நிலையம், படை தளம் ஆகியன உள்ள இடம்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.
பாதிப்பு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை.
சனிக்கிழமை ஈரான் சுமார் 300 கணைகள் கொண்டு இஸ்ரேலை தாக்கி இருந்தது. அவற்றின் 99% அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகளால் தடுத்து முறியடிக்கப்பட்டு இருந்தன.
அதற்கு முன் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கி 13 பேர் பலியாகி இருந்தனர்.