ஏற்கனவே அறிவித்தபடி இன்று முதல் அமெரிக்கா ஈரான் மீதான முழு அளவிலான பொருளாதார தடையை நடைமுறை செய்துள்ளது. ஆனாலும் 8 நாடுகளுக்கு ஈரானின் எண்ணெய்யை மேலும் 180 நாட்களுக்கு கொள்வனவு செய்ய விதிவிலக்கையும் அளித்துள்ளது அமெரிக்கா.
.
சீனா, இந்தியா, தாய்வான், ஜப்பான், தென் கொரியா, துருக்கி, கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகளுக்கே மேலும் 180 நாட்களுக்கு ஈரானின் எண்ணெயை கொள்வனவு செய்ய அனுமதித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
.
ஆனால் சீனா அவ்வாறான ஒரு விதிவிலக்கை கேட்டிருக்கவில்லை. சீனா அமெரிக்காவின் ஈரான் மீதான தடை தவறானது என்றும், தான் தொடர்ந்தும் ஈரானுடன் பொருளாதார தொடர்புகளை பேனாவுள்ளதாகம் கூறியுள்ளது.
.
அதேவேளை 180 நாட்களின் பின் மேற்கூறிய 8 நாடுகளும் ஈரானின் எண்ணெய்யை கொள்வனவு செய்வதை முற்றாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது ரம்ப் அரசு.
.
ஈரானின் எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் முதல் நாடுகளும் முறையே சீனா, இந்தியா, தென் கொரியா, துருக்கி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் ஆகும்.
.