இன்றில் இருந்து இந்தியாவும் முழு முடக்கம்

India

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று நடுநிசியில் இருந்து 21 நாட்களுக்கு முழு இந்தியாவும் முடக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை பிரதமர் மோதி இன்று தொலைக்காட்சி ஊடாக அறிவித்து உள்ளார்.
.
இந்தியாவில் தற்போது 519 பேர் கொரோனா வரைஸ் தொற்றி உள்ளார்கள். அத்துடன் 10 பேர் மரணமாகியும் உள்ளனர். கொரோனா தொற்றியோர் தொகை அதற்கான பரிசோதனையை செய்தோர் தொகையில் தங்கி உள்ளது. தற்போது இந்தியாவில் சிறிதளவு தொகையினரே பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர்.
.
இந்த 21-நாள் கட்டுப்பாட்டை கடைபிடியாவிட்டால், இந்தியா 21 வருடங்களால் பின்தங்கும் என்றும் மோதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
.
முடக்கப்படும் காலத்தில் வைத்தியசாலைகள் போன்ற அவசிய சேவைகள் தொடர்ந்தும் இயங்கும். கொரோனா காரணமாக வைத்திய சேவைகளுக்கு மேலும் $2 பில்லியன் செலவிடப்படும் என்றும் மோதி கூறி உள்ளார்.
.
கியூபாவில் 1,000 பேருக்கு 81.9 வைத்தியர்கள் உள்ளனர்.
ஜெர்மனியில் 1,000 பேருக்கு 42.087 வைத்தியர்களே உள்ளனர்.
பிரான்சில் 1,000 பேருக்கு 32.349 வைத்தியர்களே உள்ளனர்.
பிரித்தானியாவில் 1,000 பேருக்கு 28.06 வைத்தியர்களே உள்ளனர்.
கனடாவில் 1,000 பேருக்கு 26.102 வைத்தியர்களே உள்ளனர்.
அமெரிக்காவில் 1,000 பேருக்கு 25.948 வைத்தியர்களே உள்ளனர்.
சீனாவில் 1,000 பேருக்கு 17.776 வைத்தியர்களே உள்ளனர்.
இந்தியாவில் 1,000 பேருக்கு 7.776 வைத்தியர்களே உள்ளனர்.
இலங்கையில் 1,000 பேருக்கு 9.58 வைத்தியர்கள் உள்ளனர்.
சோமாலியாவில் 1,000 பேருக்கு 0.229 வைத்தியர்கள் உள்ளனர்.
.