இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு குறைந்தது 129 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 300 பேர் வரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர்.
Kanjuruhan என்ற விளையாட்டு மைதானத்தில் Persebaya Surabaya என்ற அணிக்கும் Arema Malang என்ற அணிக்கும் இடையில் சனிக்கிழமை இரவு கால்பந்தாட்ட போட்டி ஒன்று இடம்பெற்றது. Persebaya Surabaya அணி 3 goal பெற்று 2 goal பெற்ற Arema Malang அணியை வென்று இருந்தது.
போட்டி இறுதியில் மைதானத்தில் இருந்த சில குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களை அடக்க போலீசார் கண்ணீர்ப்புகை வீசினர். அப்புகையில் இருந்து தப்ப ஏனையோர் வாசலை நோக்கி ஓட நெரிசல் உருவானது. அந்த நெரிசலுக்கே 129 பேர் பலியாகினர்.
இந்த விளையாட்டு மைதானம் சுமார் 42,500 பார்வையாளரை கொள்ளக்கூடியது. ஆனால் இன்று இருந்த பார்வையாளர் எண்ணிக்கை அறியப்படவில்லை.
இன்றைய அனர்த்தம் காரணமாக அடுத்த கிழமைக்கான போட்டிகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளன.