இந்தோனேசியாவின் போர்னியோ (Borneo) தீவின் சுலவேசி (Sulawesi) பகுதியில் உள்ள குகைகளுக்குள் சுமார் 44,000 வருட பழமைவாய்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
.
Griffith University (Brisbane, Australi) ஆய்வாளர்கள் Nature என்ற வெளியீட்டில் இவ்விசயத்தை வெளியிட்டு உள்ளார். இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன் இப்பகுதியில் சில குகை ஓவியங்களை கண்டிருந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் மேலும் குகை ஓவியங்களை தேடி தேடுதல் நடாத்தினர்.
.
இப்பகுதியில் மட்டும் குறைந்தது 242 குகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் வேறு இடங்களிலும் குகைகளை தேடி வருகின்றனர்.
.
இந்த ஓவியங்களில் சிலவற்றில் மனிதர்கள் போன்ற உருவத்தை உடையோர் எருமை போன்ற மிருகத்தை (buffalo/anoa) கயிறுகள் போன்றவையின் உதவியுடன் பிடிப்பது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
.
கடந்த வருடம் சுமார் 40,000 வருட பழமை வாய்ந்த குகை ஓவியங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன.
.