இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் University Grants Commission செய்யும் NEET (National Eligibility and Entrance Test) சோதனை கேள்விகள் சோதனை தினத்துக்கு முன் வெளியாகி ஆர்ப்பாட்டங்களையும், நீதிமன்ற வழக்குகளையும் தோற்றுவித்து உள்ளது. இதில் மொத்தம் 180 வினாக்கள் உண்டு. சரியான பதிலுக்கு 4 புள்ளிகளும், தவறான பதிலுக்கு -1 புள்ளிகளும் வழங்கப்படும். சுமார் 24 இலச்சம் மாணவர் தோற்றிய இது பல்கலைக்கழக நுழைவுக்கு மாணவரை தெரிவு செய்வது.
NEET குளறுபடி பகிரங்கத்துக்கு வந்திருந்த காலத்தில் இடம்பெற்ற National Testing Agency செய்யும் NET (National Eligibility Test) சோதனை இடம்பெற்ற மறுத்தினமே இடைநிறுத்தம் (cancel) செய்யப்பட்டுள்ளது. சுமார் 9 இலச்சம் பட்டதாரிகள் தோற்றிய இது பல்கலைக்கழக விரிவுரையாளரை தெரிவு செய்வது.
NEET குளறுபடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள Anurag Yadav என்ற மாணவன் Physics பாடத்துக்கு 85.8% புள்ளிகளும், Biology பாடத்துக்கு 51.0% புள்ளிகளும், Chemistry படத்துக்கு 5% புள்ளிகளும் பெற்றுள்ளார். தனக்கு அனைத்து பாட கேள்விகளும் சோதனைக்கு முன்னைய தினம் கிடைத்திருந்தாலும் chemistry கேள்விகளையும், விடைகளையும் பாடமாக்க தனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்று விசாரணையில் கூறியுள்ளார்.
மாணவர் ஒவொருவரும் சோதனை வினாக்களுக்கு சுமார் 40 இலச்சம் இந்திய ரூபாய்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தொகையை வருமானம் அற்ற மாணவர் வழங்கியிருக்க முடியாது.
வழமையாக ஒருவர் அல்லது இருவர் முழுமையான 720/720 புள்ளிகளை பெறும் இந்த சோதனைக்கு இம்முறை 67 மாணவர்கள் 720/720 புள்ளிகளை பெற்று உள்ளனர். அதில் 6 பேர் ஹரியானவின் ஒரு சோதனை நிலையத்தில் சோதனையை எழுதியவர்கள்.