1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட NDTV (New Delhi TV) என்ற செய்தி நிறுவனத்தை இந்திய செல்வந்தர் அடானி (Adani) பலவந்தமாக கைக்கொள்ள முயற்சிக்கிறார். NDTV நிறுவனத்தை ஆரம்பித்தவருக்கு தெரியாமலேயே இந்த அறிவிப்பை அடானி நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தாம் NDTV நிறுவனத்தின் 29.18% உரிமையை பங்கு (stock) கொள்வனவு மூலம் செய்ய உள்ளதாக அடானி கூறி இருந்தாலும், அதற்கு முன்னர் மேலும் 26% உரிமையை பெற இருந்ததை மறைத்து உள்ளது அடானி.
அது மட்டுமன்றி கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 369.75 இந்திய ரூபாய்க்கு விலைபோன NDTV பங்கு ஒவ்வொன்றையும் அடானி 294.00 ரூபாய்க்கு மட்டுமே கொள்வனவு செய்ய முனைகிறது. அதவாது பங்குகளை சுமார் 20% கழிவில் கொள்வனவு செய்ய முனைகிறது.
NDTV நிறுவனத்தை ஆரம்பித்த Prannoy Roy என்பவரும், அவரின் மனைவியும் தமக்கு இது தொடர்பாக அறிவிப்பு எதையும் அடானி செய்திருக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
NDTV செய்தி சேவை இந்திய மோதி அரசுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்காது, அவ்வவ்போது மோதி அரசின் மீது கடுமையான கேள்விகளையும் தொடுத்து உள்ளது.
பிரதமர் மோதியின் நட்பில் வளரும் அடானி இந்தியாவின் இன்னோர் செல்வந்தரான அம்பானியியுடனும் போட்டியிட முனைகிறார். முகேஷ் அம்பானி Network18 என்ற செய்தி நிறுவனத்தை இயக்குகிறார்.
மறுபுறம் அடானி நிறுவனம் முதலீட்டுக்கு ஆபத்து நிறைந்த நிறுவனம் ஆகிறது என்று Finch Group அமைப்பின் CreditSights கூறியுள்ளது.