இந்தியாவின் 3 ஆவது பெரிய வங்கியான ICICI (Industrial Credit and Investment Corporation of India) என்ற வங்கியில் ஊழல் செய்தார் என்று கூறி அதன் முன்னாள் CEO Chanda Kochhar, அவரின் கணவர் Deepak Kochhar ஆகியோருடன் Venugopla Dhoot என்பவர் மீதும் விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன. Videocon என்ற நிறுவனத்தின் உரிமையாளரான வேணுகோபால் கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்திய CBI (Central Bureau of Investigation) கூற்றுப்படி ICICI வங்கியின் CEO Chanda வேணுகோபாலின் Videocon நிறுவனத்துக்கு தவறான முறையில் 2009 முதல் 2011 வரையிலான காலத்தில் 1,875 கோடி இந்திய ரூபாய்களை கடனாக வழங்கி உள்ளார். இந்த கடனால் ICICI வங்கி 1,730 கோடி இந்திய ரூபாய்களை நட்டம் அடைந்து இருந்தது.
கடனை பெற்ற வேணுகோபால் பின்னர் பல கோடி பணத்தை CEO வின் கணவர் Deepak ஆரம்பித்த NuPower Renewables Pvt Ltd என்ற நிறுவனத்துக்கு வழங்கி உள்ளார் என்கிறது CBI.
ஊழலை அறிந்த ICICI வங்கியின் பங்காளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பமாகின.
கடனை பெற்ற வேணுகோபால் தற்போது முன்னாள் ICICI வங்கியின் CEO வுக்கு எதிராக சாட்சி வழங்க முன்வந்துள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ICICI வழங்கிய கடனுக்கும் NuPower பெற்ற பணத்துக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் CEO Chanda. CEO ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2015ம் ஆண்டில் வேணுகோபால் $1.19 பில்லியன் செலுத்தக்களை கொண்ட இந்தியாவின் 61 ஆவது செல்வந்தராக இருந்தவர்.
முன்னாள் CEO Chanda 2011ம் ஆண்டு இந்தியாவின் பத்ம பூஷன் பாராட்டு பெற்றவர். 2009ம் ஆண்டு இவர் Forbes வெளியீட்டின் World’s 100 Most Powerful Women பட்டியலில் 20 ஆம் இடத்தில் இருந்தவர்.
CBI விசாரணை ஏன் இவ்வளவு காலம் இழுபட்டது என்றும், ஏன் இந்த கடனுடன் தொடர்புடைய மற்றைய ICICI வங்கி அதிகாரிகள் விசாரணை செய்யப்படவில்லை என்றும் CBI மீது கேள்விகள் தொடுக்கப்பட்டு உள்ளன.