அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசின் விசாரணை, இந்தியாவில் இயங்கும் Cadbury’s என்ற chocolate தயாரிக்கும் நிறுவனம் இல்லாத ஒரு தொழிற்சாலையை பயன்படுத்தி $46 மில்லியன் வரி ஒழிப்பு செய்துள்ளது.
Cadbury’s இனது ஆவணங்களின்படி இவர்களின் Himachal Pradesh தொழில்சாலை 2010 ஆம் ஆண்டு பங்குனி 31 முதல் chocolate உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த தொழில்சாலைக்கு முறைப்படி அரச உரிமை அப்போது கிடைத்திருக்கவில்லை. அவ்வகை அரச உரிமை 2011 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆவணப்படி இவர்கள் வரி எதுவும் செலுத்தாது $591 மில்லியன் வருமானத்தை கொண்டிருந்துள்ளனர்.
இதே தொழில்சாலை பிறிதொரு சட்டப்பிரச்சனையிலும் உள்ளது. அதில் இவர்கள் இந்திய அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு இவர்கள் இந்தியாவில் மட்டும் $700 மில்லியன் பெறுமதியான விற்பனை செய்துள்ளனர்.