கொழும்பு துறைமுகத்தின் West Container Terminal (WCT) திட்டத்தின் 51% உரிமை இந்தியாவின் Adani Ports and Special Economic Zone Limited (APSEZ) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. மிகுதியை இலங்கையின் John Keells Holding PLC நிறுவனமும், இலங்கையின் துறைமுக அதிகாரசபையும் (SLPA) கொண்டிருக்கும். இவ்வாறு 51% உரிமையை கொண்டிருப்பது Adani க்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கும்.
துறைமுகத்தை கட்டுதல், 35 ஆண்டுகளுக்கு இயக்குதல், பின் இலங்கைக்கு கையளித்தல் (build, operate, and transfer) என்ற அடிப்படையில் Adani செயற்படும்.
சுமார் 1.4 km நீளமும், 20 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த WCT ஆண்டுக்கு சுமார் 3.5 மில்லியன் 20 அடி நீள அல்லது அதற்கு ஒப்பான (TEU, Twenty-foot equivalent) கொள்கலன்களை கையாளும். அதனால் இந்த துறை மிக பெரிய (ultra large) கப்பல்களுக்கு சேவை செய்யக்கூடியதாக இருக்கும்.
இந்த செய்தியால் Adani நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கின் பெறுமதி சுமார் 2% ஆல் அதிகரித்து உள்ளது.
இந்த வர்த்தக நடவடிக்கைக்கும், ஐ.நாவில் இலங்கைக்கான தீர்மானத்தில் இந்திய நிலைப்பாட்டுக்கும் தொடர் உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் அறியலாம்.