இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். இவர் சனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திப்பார்.
இந்தியா முதலில் ரணில் சனாதிபதி ஆவதையே விரும்பியது. ஆனால் அது சாத்தியம் ஆகாது என்று தெரிந்தவுடன் சஜித்தை சனாதிபதி ஆக்க முனைந்தது. இறுதியில் அனுரவே சனாதிபதி ஆனார்.
அனுர ஆட்சி இந்தியாவின் விருப்பத்துக்குரியது அல்ல. குறைந்தது பாராளுமன்றமாவது எதிர் கட்சிகளின் கைகளுக்கு செல்வதையே இந்தியா விரும்பும். ஆனால் அந்த நோக்கில் பகிரங்கமாக செயல்பட முடியாது. அனுர கட்சி பாராளுமன்றத்ததையும் வென்றால் அது இந்தியாவுக்கு நெருக்கடி ஆகும்.
இந்தியா செய்ய முனையும் பெரும் திட்டங்கள் பல தற்போதும் முடங்கி உள்ளன.