இந்திய ‘பயங்கரவாதி’ கனடாவில் கைது, உறவில் மேலும் திருப்பம்

இந்திய ‘பயங்கரவாதி’ கனடாவில் கைது, உறவில் மேலும் திருப்பம்

இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையில் சீக்கியர் தொடர்பாக உறவு முறுகல் நிலையில் இருக்கையில் இந்திய அரசு பயங்கரவாதி என்று கூறும் Arsh Dalla என்று அழைக்கப்படும் Arshdeep Singh Gill (வயது 28) கனடாவில் துப்பாக்கி சூடு ஒன்று காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட, சீக்கிய பிரிவினை வாதியான Hardeep Nijjar என்பவருக்கும் Dalla வுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. இந்தியாவே Nijjar ஐ படுகொலை செய்தது என்று ரூடோ அரசு குற்றம் சுமத்தி இருந்தது.

கனடாவின் Halton பகுதி போலீசார் Toronto வின் புறநகர் பகுதியான Guelph நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கி சூடு நிகழ்த்திய இருவர் கைது செய்யப்பட்டதாக கூறி இருந்தது. ஆனால் கைதானார் பெயர்களை போலீசார் அப்போது வெளியிட்டு இருக்கவில்லை.

ஆனால் கைதான இருவரில் ஒருவர் இந்தியாவில் பயங்கரவாதி என்று தேடப்படும் சீக்கியரான Dalla என்று அறியப்பட்டுள்ளது.

Dalla கனடாவில் வசித்துக்கொண்டு இந்தியாவில் பல கொலைகளை கைக்கூலிகள் மூலம் செய்தவர் என்று இந்தியா முன்னர் கூறியிருந்தது.

இந்திய-கனடிய விரிசலை Dalla கைது மேலும் குழப்பமாக்கும்.