இந்தியாவின் இரண்டாம் கரோனா பரவலுக்கு அரசின் அசமந்த போக்கே பிரதான காரணம் என்பதை அக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. பல நிகழ்விகளை மத்திய அரசு தடுத்து இருந்திருந்தால் கரோனா பரவல் தொடர்ந்தும் கட்டுப்பாடில் இருந்திருக்கும்.
பின்வரும் சில நிகழ்வுகள் அதை காட்டி நிற்கின்றன.
ஜனவரி 28: கரோனாவை திறமையாக கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியா உலகை காப்பாற்றி உள்ளது என்றார் பிரதமர் மோதி. இந்தியாவில் அன்றைய கரோனா தொற்று தொகை 18,855 மட்டுமே.
மார்ச் 7: நாங்கள் கரோனா பரவலின் முடிவில் உள்ளோம் என்கிறார் இந்திய சுகாதார அமைச்சர் Harsh Vardhan. அன்றைய தொற்று தொகை 18,599.
மார்ச் 12: அகமதாபாத் Narendra Modi Stadium மைதானத்தில் இந்தியாவுக்கும், பிரித்தானியாவுக்கு இடையில் இரண்டு T20 கிரிக்கெட் போட்டிகள், ஒவ்வொன்றுக்கும் சுமார் 67,000 பார்வையாளர்.
மார்ச் 27: சில மாநில தேர்தல் ஊர்வலங்கள் ஆரம்பம். பெரும் ஊர்வலங்கள் பல கிழமைகள் இடம்பெற்றன. அன்றைய தின தொற்று தொகை 62,714.
மார்ச் 30: நிலைமை கட்டுபாட்டில் உள்ளது என்று மீண்டும் கூறினார் சுகாதார அமைச்சர். அன்றைய தொற்று தொகை 53,480.
ஏப்ரல் 1: கும்பமேளா நிகழ்வுகள் ஆரம்பம். அன்றைய தின தொற்று தொகை 81,466.
ஏப்ரல் 17: தேர்தல் கூட்டம் ஒன்றில் மக்களை நோக்கி “என்றுமில்லாத அளவில் திரண்ட மக்கள் கூட்டம்” என்று மோதி வியப்பு. அன்றைய தொற்று தொகை 261,394.
தரவு: John Hopkins University