கனடாவின் Toronto நகரில் உள்ள ஸ்ரீ துர்க்கா ஆலயத்தில் கட்டுமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து வந்திருந்த தற்காலிக வேலையாளர் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பாக குறைபாடுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் ஆலயம் அந்த குறைபாடுகளை மறுக்கிறது.
.
.
கனடாவின் ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான CBC (Canadian Broadcasting Corporation) இந்த குறைபாடுகளை விசாரணனை செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
.
.
இந்தியாவில் இருந்து வந்திருந்த தொழிலாளிகளான 51 வயதுடைய சேகர் குருசாமி, 46 வயதுடைய சுதாகர் மாசிலாமணி ஆகியோர் இந்த முறைப்பாடுகளை முவைத்து கருத்து தெரிவித்து உள்ளனர்.
.
.
தங்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்பட்ட உணவும் அதிகாலையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 அல்லது 3 மணித்தியாலங்கள் பின்னரே கிடைத்தன என்றும் அவர்கள் கூறி உள்ளனர். அத்துடன் தமக்கு ஆலயத்தின் அடைத்தளத்தில் உள்ள heater களுக்கு அண்மையிலேயே வதிவிடம் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
.
.
குறைபாடுகளை தெரிவித்தபோது பிரதம குரு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
.
அதேவேளை இந்த ஆலய பிரதம குருவாகிய தியாகராஜ குருக்களிடம் ஒரு விலை உயர்ந்த BMW வாகனம் இருப்பதாகவும், ஆலய உரிமையில் ஒரு Mercedes S5A வாகனம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
.
.
படம்: CBC
.