இந்திய தொழிற்சாலை தீக்கு 43 பேர் பலி

Delhi

இந்திய தலைநகர் டெல்கியில் உள்ள பாடசாலை புத்தக பை (bag) தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஞாயிரு அதிகாலை இடம்பெற்ற தீக்கு குறைந்தது 43 பேர் பலியாகி உள்ளனர். நான்கு மாடிகளை கொண்ட இந்த தொழிற்சாலையில் சுமார் 100 ஊழியர்கள் உறங்கிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
.
மேற்படி தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்படும் நிலையம் என்று தீயணைப்பு அதிகாரி BBC செய்தி நிறுவனத்துக்கு கூறி உள்ளார். இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டும் உள்ளார்.
.
முதலாம் மாடியில் ஆரம்பித்த தீ விரைவாக மேல் மாடிகளுக்கு பரவி, அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை பலி கொண்டுள்ளது. இந்த கட்டிடம் முறைப்படியான தீ தொடர்பான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கவில்லை.
.
இங்கு தொழில் புரியும் ஊழியர்கள் பொதுவாக பீகார் போன்ற வசதி குறைந்த இடங்களில் இருந்து வந்தவர்கள். இவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 150 இந்திய ரூபாய்களை ($2.10) ஊதியமாக பெறுவார்.
.