தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பாண்டுச்சேரி ஆகிய நான்கு இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன் அசாம் மாநிலத்தில் தேர்தல் அண்மையில் முடிவடைந்து உள்ளது.
.
.
இந்த ஐந்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையாளரால் மொத்தம் 113 கோடி இந்திய ரூபாய்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வாக்குக்களை கொள்வனவு செய்யக்கூடும் என்ற அச்சத்தாலேயே இவ்வாறு சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. பணம், மதுபானம் அல்லது பொருள்பண்டம் வழங்கி ஆதரவு எடுப்பதை தவிர்க்கவே இந்த முயற்சி.
.
.
தமிழ்நாட்டில் மட்டும் 68 கோடிக்கு மேல் இவ்வாறு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கே வரும் 16 ஆம் திகதி 234 ஆசனங்களை நிரப்ப தேர்தல் இடம்பெறவுள்ளது. அதேவேளை கேரளாவில் 17 கோடியும், மேற்கு வங்காளத்தில் 14 கோடியும் முடக்கப்பட்டுள்ளன.
.
.
தேர்தல் விதிகளுக்கு அமைய வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். மு. க. ஸ்டாலின் தன்னிடமும் தனது மனைவியிடமும் மொத்தம் 5.9 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டில் இவர்கள் தம்மிடம் 2.11 கோடி சொத்துக்கள் மட்டுமே இருந்ததாக கூறியிருந்தனர். அதாவது 5 வருடத்துள் அவர்களின் சொத்து 175% ஆல் அதிகரித்து உள்ளது, அதுவும் ஆட்சியில் இல்லாதபோது.
.