இந்தியாவினதும், ஜப்பானினதும் கூட்டுறவில் உருவாகும் நிறுவனம் ஒன்று இலங்கையின் மேற்கு கரையோரத்தில் உள்ள கேரவலபிட்டிய (Kerawalapitiya) என்ற இடத்தில் இயற்கை வாயு (LNG அல்லது Liquefied Natural Gas) குதம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த முதலீட்டின் மொத்த பெறுமதி சுமார் $250 மில்லியன் என்று கூறப்படுகிறது.
.
.
இந்திய நிறுவனமான Petronet LNG Limited முன்னர் வருடம் ஒன்றில் 2-மில்லியன்-தொன் (2 MT) LNGயை இறக்குமதி செய்யும் குதம் ஒன்றை இலங்கையில் நிறுவ விரும்பியது. ஆனால் இலங்கை இந்தியா தனியே செயல்படாது ஜப்பானுடன் இணைந்து அந்த குதத்தை அமைப்பதை விரும்பியது. முடிவில் இந்திய நிறுவனமும், ஜப்பான் சார்பில் இன்னோர் நிறுவனமும் 50:50 உரிமையுடன் இந்த குதத்தை நிறுவ முன்வந்துள்ளன.
.
.
இந்த குதத்துக்கு அருகில் இயற்கை வாயு மூலம் 300 Mega Watt மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. தற்போது oil மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் ஒன்று LNG மூலம் இயங்கும் நிலையமாக மாற்றப்படும்.
.
.
Petronet நிறுவனத்திடம் ஏற்கனேவே இரண்டு LNG குதங்கள் உள்ளன. அதில் ஒன்று குயாரத்தின் Dahej பகுதியிலும், மற்றையது கேரளாவின் Kochi பகுதியிலும் உள்ளன. ஜப்பான் சார்பில் செயல்படப்போகும் நிறுவனம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை.
.
.