இந்திய படையினரும், சீன படையினரும் புரிந்த மல்லுக்கு 20 இந்திய படையினர் பலியாகி உள்ளனர். ஆயுத பயன்பாடுகள் அற்ற இந்த மல்லுக்கட்டல் திங்கள் மாலை Galwan Valley பகுதியில் இடம்பெற்று உள்ளது. இந்திய படையினர் சீன பகுதிக்குள் நுழைந்தாலே சண்டை உருவானதாக சீனா கூறுகிறது.
.
சீனா தரப்பில் 43 படையினர் பலியானதாக இந்திய இராணுவம் கூறுகிறது. ஆனால் சீனா தமது தரப்பு இழப்புகளை இதுவரை வெளியிடவில்லை. பல சீன ஹெலிகள் சம்பவ இடத்துக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.
.
இந்திய அரசு மரணங்களுக்கான காரணத்தை அறிவிக்கவில்லை என்றாலும், பெயர் குறிப்பிடப்படாத இந்திய படை அதிகாரி ஒருவர் hand-to-hand சண்டைக்கே படையினர் பலியானதாக கூறி உள்ளார்.
.
சுமார் 45 வருடங்களின் பின் முதல் தடவையாக இந்திய-சீன எல்லை முரண்பாட்டில் படையினர் பலியாகி உள்ளனர். 1975 ஆம் ஆண்டு 4 இந்திய படையினர் கிழக்கே உள்ள அருணாச்சல் பகுதியில் பலியாகி இருந்தனர்.
.
இந்திய-சீன எல்லையோரம் பல இடங்களில் தீர்மானிக்கப்படாத எல்லைகளாக உள்ளன. இவ்விடங்கள் Line of Control என்ற இராணுவ எல்லைகளாகவே உள்ளன.
.
சுமார் 38,000 சதுர km Aksai Chin பகுதி இந்தியாவின் அங்கம் என்கிறது இந்தியா. அப்பகுதி தனது பகுதி என்கிறது சீனா. இப்பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாடில் உள்ளது. Galwan Valley இந்தியாவுக்கும் Aksai Chin உக்கும் இடையில் உள்ளது.
.