இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் பிரிவினைக்காக போராடும் ஆயுத குழுக்களுக்கு சீனா ஆயுததங்கள் மற்றும் ஆயுத பயிற்சிகளை வழங்குவதாக தன்னை அடையாளம் செய்ய விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தி உள்ளார். அந்த குழுக்கள் தற்போது இந்திய படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்து உள்ளன.
சீனா நேரடியாக இந்திய குழுக்களுக்கு உதவாமல், இந்திய எல்லையோரம் பர்மாவில் உள்ளூர் ஆட்சி செய்யும் United Wa State Army (UWSA) என்ற குழு மூலமுமே உதவுகிறது என்கிறது இந்தியா. இந்தியாவின் நாகா உட்பட குறைந்தது 4 இந்திய ஆயுத குழு தலைவர்களும் சில ஓய்வுபெற்ற சீன இராணுவ அதிகாரிகளும் சீனாவின் தென் நகரான Kunming நகரில் அண்மையில் கூடியதாகவும் இந்தியா கூறுகிறது.
செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி பர்மா எல்லையோரம் இந்திய குழுக்களுக்கு சென்ற ஆயுதங்களை இந்தியா இடைமறித்து இருந்தது. அக்டோபர் 21 ஆம் திகதி இந்திய படையினர் ஒருவர் எல்லையில் கொலை செய்யப்பட்டும் இருந்தார்.
சீனாவும், UWSA குழுவும் இந்தியாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளன.
இந்தியாவின் பல திணைக்களங்கள் பிரதமர் மோதிக்கு இந்த நிலவரத்தை தெரிவித்தபின், இந்தியா மேலதிகமாக பல்லாயிரம் படைகளை பர்மாவின் எல்லையோரம் அனுப்பி உள்ளது.
அண்மையில் இந்தியா தீபெத் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கி இந்திய-சீன எல்லைகளில் பயன்படுத்தியமை தெரிய வந்திருந்தது. இதுவரை இந்த உண்மையை இந்தியா மறுத்து வந்திருந்தாலும், இந்த இரகசிய படைகளின் உறுப்பினர் சிலர் அண்மையில் இந்திய-சி எல்லையோரம் மரணித்தபின் உண்மை பகிரங்கத்து வந்திருந்தது. அதனால் சீனா விசனம் கொண்டிருந்தது.