இந்திய காஷ்மீர் சூட்டுக்கு 20 பேருக்கு மேல் பலி 

இந்திய காஷ்மீர் சூட்டுக்கு 20 பேருக்கு மேல் பலி 

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள Pahalgam என்ற காஷ்மீர் பகுதியில் ஆயுத குழு ஒன்று செய்த துப்பாக்கி சூட்டுக்கு குறைந்தது 20 உள்நாட்டு உல்லாச பயணிகள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர்.

இரண்டு அல்லது மூன்று துப்பாக்கிதாரர் இந்த தாக்குதலை செய்திருக்கலாம் என்று Indian Express கூறுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவ்வகை சூட்டுக்கு 9 பேர் பலியாகியும், 33 பேர் காயப்பட்டும் இருந்தனர்.

Kashmir Resistance என்ற முன்பின் பெரிதும் அறியப்படாத ஆயுத குழு ஒன்று தாமே இந்த தாக்குதலை செய்ததாக கூறுகிறது. அத்துடன் 85,000 க்கும் அதிகமான வெளியிடத்தவர் இங்கு சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றும் நோக்கில் குடியேற்றப்பட்டு உள்ளனர் என்றும் இந்த குழுகுற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில் சுமார் 500,000 இந்திய படையினர் நிலை கொண்டு உள்ளனர். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் அதற்கு நிகரான அளவு பாகிஸ்தான் படைகள் உள்ளன.