இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள Surat என்ற நகரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக்கு 19 மாணவர்கள் பலியாகியும், 20 மாணவர்கள் காயமடைந்து உள்ளனர். மரணித்தோரில் 16 பேர் மாணவிகள்.
.
தீ விபத்து இடம்பெற்றபோது இந்த தனியார் கல்விநிறுவன (tuition) வகுப்பறையில் சுமார் 50 மாணவர்கள் இருந்துள்ளனர். தீக்கான காரணம் மின் ஒழுக்கு என்று கூறப்படுகிறது.
.
Takshashila Arcade என்ற இந்த கட்டிடம் ஒரு தட்டு கட்டும் உரிமையே வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் உரிமையாளர் 3 மாடிகளை கட்டி உள்ளார். மூன்றாம் மாடியிலேயே இந்த வகுப்பறை இருந்துள்ளது.
.