இந்தியா 6 பேரை பாகிஸ்தானில் படுகொலை செய்ததாம் 

இந்தியா 6 பேரை பாகிஸ்தானில் படுகொலை செய்ததாம் 

கனடாவில் சீக்கியரை படுகொலை செய்ய முன் இந்தியா பாகிஸ்தானில் 6 பேரை படுகொலை செய்தது என்று அமெரிக்காவின் The Washington Post செய்தி நிறுவனம் இன்று செவ்வாய் கூறியுள்ளது.

2021ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் செய்யப்பட்ட இந்த 6 படுகொலைகளை இந்தியாவின் உளவு படையான RAW அமைப்பே செய்ததாக மேற்படி செய்தி கூறுகிறது.

பாகிஸ்தானில் படுகொலைகள் செய்வதற்கு இந்தியரை பயன்படுத்தாது, பாகிஸ்தான் வன்முறை கும்பல்களையே இந்தியா பயன்படுத்தியதாக கூறுகிறது மேற்படி செய்தி. அத்துடன் இந்தியா நேரடியாக தலையிடாது UAE நாட்டில் வாழும் முகவர்கள் மூலமே பாகிஸ்தான் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஆப்கானிஸ்தான் குழுக்களையும் இந்தியா பயன்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.

2022ம் ஆண்டு Zahoor Mistry என்பவரை பாகிஸ்தானில் வைத்து இந்தியா படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. Mistry 1999ம் ஆண்டு Air India விமான சேவையை கடத்த முயன்ற போது இந்தியர் ஒருவரை கொலை செய்ததாக அறியப்பட்டது. இந்த கொலைக்கு 2 ஆப்கானித்தான் நபர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு குறைந்தது $5,500 பணம் வழங்கப்பட்டதாம்.

2023ம் ஆண்டு Shahid Latif என்பவர் பாகிஸ்தானின் Sialkot பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். Latif 2016ம் ஆண்டு இந்தியா மீதான Pathankot தாக்குதலை திட்டமிட்டவர் என்கிறது இந்தியா.